கற்பித்தலில்
எண்ணிம பயன்பாடும் செல்நெறியும் ( 21-st Century Tamil Classroom: Teaching and Engaging Digital
Trends), ஆசிரியர்களுக்கான
21-ஆம் நூற்றாண்டு வாழ்நாள் கற்றல்
திறன்கள் ( 21st Century
Life Long Learning Skills for Teachers) எனும் இவ்விரு தலைப்புகளிலான இப்பயிலரங்கை, தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் நன்கு
அனுபவமும் மற்றும் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில்
சிறந்த ஆளுமையைப் பெற்ற நாடறிந்த ஆசிரியர் திரு வாசுதேவன் இலட்சுமணன் அவர்கள்
நடத்தினார்.
தொழில்நுட்ப
பரிமாண வளர்ச்சியில் பள்ளியிலும் கற்றல் சூழலிலும் மாணவர்கள் கருவிகளின்
பயன்பாட்டை எதிர்பார்க்கின்றனர். மாணவர்களின் அன்றாட வாழ்வும் பள்ளியில் கற்றல்
சூழலும் தொடர்பற்று வெவ்வேறு உலகங்களாய்க் காட்சி தருகிறது. இந்த வெவ்வேறு உலகத்து
நிதர்சனம் மாணவர்களை வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இன்றைய கல்வி அமைப்பின்
தலையாயப் பிரச்னை. இலத்திரனியல் கற்றல் கருவிகள் இனி நாம் புலங்கும் சூழல் வந்து
விட்டது.
0 Comments