Ticker

6/recent/ticker-posts

பன்முகத் திறமைகளை வளர்க்கும் ஒரு ஸ்மார்ட் பள்ளி

 


பாடத்தை நடத்தி, படிக்க வைத்து, தேர்வை நடத்தி விட்டால் போதும் தங்கள் பணி முடிந்து விட்டது என குறுகிய வட்டத்துடன் நின்று விடாமல் மாணவர்களின் பன்முக திறன்களை வெளிக்கொணர்வதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பள்ளி.

 

அது மெட்ரிக் பள்ளியோ, சிபிஎஸ்இ பள்ளியோ அல்ல. அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி என்பதுதான் ஆச்சரியம். திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்திலுள்ள திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளிதான் அப்பணியை சத்தமின்றி செய்து வருகிறது. அதை செய்து வரும் அப்பள்ளியின் ஆசிரியர் பழனிக்குமார் நம்மிடம் கூறியது:

"வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து கொள்வது மாணவர்கள் மத்தியில் தற்பொழுது குறைந்து வருகிறது. இக்குறையைப் போக்க நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சமூக தளங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு புதிய தகவல்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.


Post a Comment

0 Comments