Ticker

6/recent/ticker-posts

இணைய கல்வியும் இன்றைய சமூகமும் சிறப்பு கட்டுரை

 


குழந்தைகள் தொடக்கம் பெரியோர் வரை இன்று தொலைபேசிக்கு அடிமையானோரே அதிகமானோர்கள். அந்த வகையில் பார்க்கின்ற போது இன்றைய தொலைபேசிக் கல்வியினை கல்வியெனும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனரா? இன்றைய கல்வி சமூகத்தின் நிலை என்ன என்பது கேள்விக்குறியான விடயமாகும். பாமர மக்களின் கல்வி நிலை என்ன? அன்றாட வேலை செய்து தம் உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் மக்ககள் எம் சமூகத்தில் அதிகமாகவே காணப்படுகின்றனர். வேலைகள் இன்றி உணவுத்தேவையை கூட நிறைவேற்ற முடியாதவர்களுக்கு online கல்வி முறைமை எவ்வகையில் சாத்தியமானதொன்றாக முடியும். ஒரு திறன்பேசி (Smart Phone) வாங்குவதற்கு ஆகக் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாகவே தேவைப்படுகின்றது. அன்றாட உணவுத்தேவைகளைக் கூட ஒழுங்கு முறையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத பொருளாதார பின்னனியை கொண்ட வீட்டில் வசிக்கும் கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியானதொன்றாகும். எவ்வகையில் பார்த்தாலும் எதிர்காலத்தை எதிர் கொள்ள கல்வியே மூலாதாரம் எனக்கொண்டு பாடசாலைக் கல்வியை தொடர்ந்த மாணவர்களின் எதிர்காலம் online கல்வி முறைமை அவர்களை சென்றடைய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

இன்று பெரியோர்கள் கூட தொலைபேசிகளை தவறாகப் பயன்படுத்தி பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு தற்கொலை வரை செல்கின்ற இக்காலத்தில் கல்வியறிவு அற்ற பெற்றோர்கள் தம் நகைகள், சேகரித்த பொருட்களை விற்று தம் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் தொலைபேசி மூலம் வரும் ஆபத்துக்களை அறிவதில்லை. வகுப்புக்கள் நடைபெறும் நேரம் தவிர்ந்த மற்றும் பல நேரங்களிலும் திறன் பேசிகளிலே தம் நேரங்களை செலவிடுகின்றனர். தொலைபேசிகளின் நன்மை தீமைகளை பற்றி மாணவர்களுக்கான விழிப்புணர்வுகள் கூட இல்லாத நிலையில் சில பல மாணவர்கள் தம் எதிர்காலத்தை தொலைத்து விடும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றது. பெற்றோர்களின் நம்பிக்கை தம் பிள்ளைகளில் அதிகமாகவே காணப்பட்டாலும். இன்று எம் சமூகத்தில் வெளிவரும் சினிமாக்கள் பல எம் சமூகத்தில் காதல்களையும், தீயனவற்றையும் அதிகமாக கொண்டிருக்கின்றன அவற்றை பார்த்து வளரும் பிள்ளைகளின் எதிர்காலத்தின் நிலை தான் என்ன?

Post a Comment

0 Comments